இஸ்லாமியர்கள் புனித தலம் மக்காவில் தற்கொலை முயற்சி : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மக்காமசூதியின் மேல்புற கட்டத்தில் இருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா அமைந்துள்ளது. மக்கா அல் ஹராம் மசூதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மக்கா அல் ஹராம் மசூதிக்கு சென்ற இஸ்லாமியர் ஒருவர் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். மசூதியின் மேல்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த நபர், திடீரென்று அவர் மசூதியில் மேல் இருந்து கீழே குதித்தார்.
அப்போது மசூதியின் தரைளத்தில் சவுதி அரேபியாவின் பாதுகாவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மசூதியின் மேல்புறத்தில் இருந்து கீழே குதித்த நபர் அந்தரத்தில் கீழே விழுவதை பார்தது பாதுகாவலர் உடனடியாக அவரை தரையில் விழாமல் பிடித்தார். தற்கொலைக்கு முயன்றவரின் எடை தாங்க முடியாமல் இருவரும் தரையில் விழுந்தனர்.
இதனால் தற்கொலைக்கு முயன்றவர் மற்றும் காப்பாற்றிய பாதுகாவலர் ஆகியோர் காயமடைந்து அடைந்து இருந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
What's Your Reaction?

