பட்டி போட்டு ஆட்களை அடைக்கிறாங்க... கரூரில் கலவரமான அதிமுக... தேர்தல் ஆணையத்திடம் புகார்...

Apr 12, 2024 - 17:18
பட்டி போட்டு ஆட்களை அடைக்கிறாங்க... கரூரில் கலவரமான அதிமுக... தேர்தல் ஆணையத்திடம் புகார்...

கரூரில் வாக்காளர்களை பரப்புரைக்கு செல்லவிடாமல் திமுக பட்டி அமைத்து தடுப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்ப துரை, வாக்காளர்களை திமுக பட்டி அமைத்து தடுப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்ப துரை, தேர்தல் ஆணையத்தில் திமுக மீது புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “வாக்காளர்களை பட்டியில அடைத்து வைக்க கூடிய  யுக்திகளை திமுக செய்து வருகிறது. வாக்காளர்களை அடைத்து வைத்து காபி டிபன் எல்லாம் கொடுப்பதுதான் மனிதப்பட்டி. கிட்டத்தட்ட அது ஒரு மிரட்டல் தான். 

வேலைக்கு செல்லாமல் காலை முதல் மாலை வரை இருக்க வைப்பார்கள். கரூர் செல்லம்பாளையம், கவுண்டனூர், அரசு காலணியில் உள்ளிட்ட பகுதிகளில் பட்டி அமைத்துள்ளனர் என்பதை ஆதாரத்தோடு புகாராக தெரிவித்தோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, “இவ்வாறு  ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் குறித்து மாவட்ட  தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாநில தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகாரை கொடுத்திருக்கிறோம். அதேபோல, கரூரில் ராட்சத லாரிகளை கொண்டு திருட்டுத்தனமாக மணல் அள்ளி அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து தேர்தல் நடத்துவதாக ஒரு புகார் வந்தது அதற்கும் புகார் கொடுத்திருக்கிறோம்” என்று விளக்கமளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow