கோடை விடுமுறை.. குதூகலமாக டூர் கிளம்பும் மக்கள்.. தெற்கு ரயில்வேயின் குட் நியூஸ்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா செல்பவர்களின் வசதிக்காக தாம்பரம் - மங்களூரு இடையே ஏப்ரல் 19ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், சொந்த ஊர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றனர். அந்த வகையில் தாம்பரம் - மங்களூரு இடையே ஏப்ரல் 19ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து மங்களூர் சென்ட்ரல் வரை வருகிற ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில், அதாவது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை வருகிற ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2 ஆகிய தேதிகளில் அதாவது ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது
What's Your Reaction?