முதுகுவலியை காரணம் காட்டி ரஞ்சிக் கோப்பை காலிறுதியை புறக்கணித்த ஸ்ரேயஸ் ஐயர்.. பிசிசிஐ இடம் போட்டுக் கொடுத்த என்சிஏ!
முதுகுவலியால் அவதிப்படுவதால் ரஞ்சிக்கோப்பை காலிறுதிச் சுற்றில் இருந்து விலகிய மும்பை வீரர் ஸ்ரேயஸ் ஐயர், முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பிய மெயிலில், இரண்டாவது டெஸ்டிற்கு பிறகு இந்திய அணி அனுப்பிய ரிபோர்ட்டின் படி ஸ்ரேயஸ் முழு உடற்தகுதியுடன் இருந்ததாக தெரிவித்தார். கடந்த வாரம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முழு உடற்தகுதியுடன் இருக்கும் இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அணி தேர்வாளர்களும் ஸ்ரேயஸ் ஐயரை மும்பை காலிறுதியில் விளையாடும்படி அறிவுறுத்தினர். இந்நிலையில் தற்போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடிய ஸ்ரேயஸ், பெரியளவுக்கு ரன் எடுக்கவில்லை. இதையடுத்து இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், மூன்றாவது, நான்காவது டெஸ்டுகளில் அவர் சேர்க்கப்படவில்லை.
மேலும் படிக்க :
https://kumudam.com/See-if-there-is-another-job..-The-Sri-Lankan-captain-blasted-the-umpire
What's Your Reaction?