”சத்தம் பத்தாது விசில் போடு” - ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்

2025ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Nov 1, 2024 - 09:36
”சத்தம் பத்தாது விசில் போடு” - ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்

2025ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதால், 10 அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், ரோகித் சர்மா 16 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கும், பும்ரா 18 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மா 8 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


இதையடுத்து லக்னோ, தங்களது அணியில் பூரனை 21 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோய் மற்றும் மயங்க் யாதவ் 11 கோடி ரூபாய்க்கும், மோசின் கான் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோரை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பேட் கம்மின்ஸை 18 கோடி ரூயாய்க்கும், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரை 14 கோடி ரூபாய்க்கும், நிதிஷ் ரெட்டி 6 கோடி ரூபாய்க்கும், கிளாசன் 23 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.


அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கானை 18 கோடி ரூபாய்க்கும், சுப்மன் கில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், சாய் சுதர்சனை 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், ராகுல் டெவாட்டியா மற்றும் ஷாருக் கானை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கும், சக்ரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ரஸல் ஆகியோரை 12 கோடி ரூபாய்க்கும், ஹர்சித் ரானா மற்றும் ராமன்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை 18 கோடி ரூபாய்க்கும், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரை 14 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையர் 11 கோடி ரூபாய்க்கும், சந்தீப் சர்மாவை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


தொடர்ந்து ஆர்சிபி அணி, விராட் கோலியை 21 கோடி ரூபாய்க்கும்,,  ரஜத் படிதாரை 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அக்சார் பட்டேலை 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் பொரேலை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 


இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷஷாங்க் சிங்கை 5கோடியே 50லட்சம் ரூபாய்க்கும்
பிரப்சிம்ரன் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் என 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்து, நவம்பர் மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் அதிக தொகையுடன் பங்கேற்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow