குடிநீரை பராமரிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்.. பெங்களூருவில் அதிரடி உத்தரவு!!
பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீரை பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீரை பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் தினம் தினம் அவதிப்படுகிறார்கள். 1 கோடியே 30 லட்சம் பேர் கொண்ட பெங்களூருவில், ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், ஆயிரத்து 500 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைப்பதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் 236 தாலுகாக்களில் நீர் பஞ்சம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 219 தாலுகாக்களில் கடும் பிரச்னை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் கார் கழுவுதல், தோட்டப்பணிகள், சாலை-கட்டிட கட்டுமானம், நீரூற்றுகள் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?