தமிழகத்தில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி...பாஜக பட்டியலில் இடம்பெற்ற முக்கிய புள்ளிகள்...
தமிழ்நாட்டில் இதுவரை 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்றும், திறந்த வெளி வேனில் வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகள் பலவும் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மூலம் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜக நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளது. திமுகவைப் பொருத்தவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 40 பேருக்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்ற கட்சிகள் 20 பேரையும் தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதுவரையிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?