Amaran Release Date: அமரன் ரிலீஸ் தேதியை லாக் செய்த சிவகார்த்திகேயன்... வேட்டையனுக்கு போட்டியா..?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அமரன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக் மூவியாக உருவாகியுள்ள அமரன், ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அமரன் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து, ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அதேபோல், அமரன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கிவிட்டார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஜூன் 1ம் தேதி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அப்போது அமரன் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் அல்லது படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே அமரன் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனுஷின் ராயன், கமலின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா என மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகின்றன. இதனால் செப்டம்பரில் அமரன் படத்தை ரிலீஸ் செய்யலாமா என படக்குழு பிளான் செய்து வருகிறதாம். ஆனால், செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், செப்.27ம் தேதி அமரனை ரிலீஸ் செய்யலாமா என ஒரு டாக் சென்று கொண்டிருக்கிறதாம்.
அப்படியில்லை என்றால் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமரன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் அக்டோபரில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாகிறது. ஆயுத பூஜை ஸ்பெஷலாக வேட்டையன் ரிலீஸாகவிருப்பதால், அதற்கு முன்பாகவே அமரனை களமிறக்கிவிடலாம் என படக்குழு ஆலோசனை செய்து வருகிறதாம். ஆனாலும் இதுபற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படமும் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?