கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் அடுத்த படைப்பு என்னனு தெரியுமா ?

VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்.

Feb 3, 2024 - 15:15
கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் அடுத்த படைப்பு என்னனு தெரியுமா ?

VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின்  வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம். 

சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்தார்.தமிழகத்திலும், உலகளவிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் வரும் பட காட்சிகள் ராஜியுடன் ஆகட்டும் சண்டை காட்சிகள் அனைத்தும் மாஸ்ஸாக அமைந்தது. 

இந்நிலையில் சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின்  வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும்  சிவண்ணா  உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்க இருக்கிறார் இயக்குனர். இப்படத்தினை VJF - வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்க இருக்கிறார்.

இயக்குநர் ஹேமந்த் M ராவ் கூறியதாவது: ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவரது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். மேலும் அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என இயக்குனர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  இயக்குநர்  தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது 5-வது படத்தில் லெஜண்ட் டாக்டர் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன், இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துளார்.

மேலும் அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் J கவுடா கூறுகையில்: சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன் மேலும் அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் M ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். படத்தின் ஜானர் மற்றும் நடிகர்கள் என படத்தின் தகவல்கள் குறித்தும் கூடிய விரைவில் ஒவ்வொன்றாக படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என  இயக்குநர் ஹேமந்த் M ராவ் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow