10 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் ரூ.12 லட்சம் கோடி ஊழல்..! மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு..!
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல்களில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பாஜக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் அவரது தலைமையில் பாரதத்தை வல்லரசாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்டதாகவும், ஊழல் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் ஊழல் என்றும் கடுமையாக சாடினார்.
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக கூறியபோது, அதற்கான தேதியை கூட மக்களுக்கு பாஜக அறிவிக்காது என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ஆனால் இப்போது சொன்னபடி, மோடி அரசாங்கத்தின் கீழ் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றுகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
What's Your Reaction?