போதைப் பொருள் டீலிங்.. தூக்கியடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” டிரெண்டிங்கில் #போதை_கடத்தல்_திமுக..!
ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் தொடர்புடையதாக தகவல் வெளியானதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் 'போதை கடத்தல் திமுக' என்ற ஹேஸ்டாக் டிரெண்டாகி உள்ளது.
டெல்லியில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது பின்னணியில் தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் உட்பட 3 பேர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்த திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளதால், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டுகளால் 'போதை கடத்தல் திமுக' , 'Drug_Mafia_Dmk' என்ற ஹாஸ்டாக்குகளும் டிரெண்டாகி உள்ளது.
What's Your Reaction?