தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.. மீனவர்களுக்கு ரெஸ்ட்.. மீன்கள் விலை உயருமா?

மீன்பிடித் தடைகாலங்களில் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Apr 13, 2024 - 12:28
Apr 13, 2024 - 14:24
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்..  மீனவர்களுக்கு ரெஸ்ட்.. மீன்கள் விலை உயருமா?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாகும். மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம்குறைந்து விடும். 

இதனைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிமுதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவைக்கப்படும். அதேநேரத்தில், மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். 

எனினும், வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வார்கள். மீன்பிடித் தடைகாலமான இரு மாதமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow