இந்தியா கூட்டணிக்காக கோவை மக்களை வஞ்சிக்கும் திமுக: அண்ணாமலை அறிக்கை

கோவை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய சிறுவாணி ஆற்றின் குறுக்கே  கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை திமுக அரசு தடுக்க வேண்டும்

Mar 24, 2024 - 21:48
இந்தியா கூட்டணிக்காக கோவை மக்களை வஞ்சிக்கும் திமுக: அண்ணாமலை அறிக்கை

கோவை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய சிறுவாணி ஆற்றின் குறுக்கே  கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை திமுக அரசு தடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருவதை திமுக அரசு தடுக்காமலும், எந்தக் கேள்வியும் கேட்காமலும் இருக்கிறது. எந்தவித தொலைநோக்குப் பார்வையும் இல்லாத திமுக அரசு, குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் செய்யவில்லை. அதனால் கோவையில் குடிநீர் பஞ்சம் தொடர்கிறது. தடுப்பணை வேலை 90% முடிந்த நிலையில், மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தடுப்பணைகள் குறித்து பேசாமல் இருப்பது, கோவை மக்களின் நலனுக்கு விரோதமாக திமுக அரசு செயல்படுவதை காட்டுகிறது. அதன் காரணமாக கோடை காலம் வரும் முன்னரே கோவையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நலனுக்காக, தமிழக மக்களை பலி கொடுக்காமல், தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்  என பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்"  என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow