பெங்களூருவை தொடர்ந்து சென்னைக்கும் வந்த வெடிகுண்டு மிரட்டல்... காவல்துறை அலர்ட்...
தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கோயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.
சென்னையில் தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தின் சூடு குறைவதற்குள் தற்போது கோயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது..
பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில் சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாஃபர் சேட் என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில் Bomb Blast in Chennai Temples Soon என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவங்களின் தாக்கம் குறைவதற்குள் தற்போது சென்னை கோயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
What's Your Reaction?