Kanguva: ”கங்குவா பார்த்து மெய் சிலிர்த்தேன்… சூர்யா நடிப்பு…” வெளியானது கங்குவா முதல் விமர்சனம்!
சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
சென்னை: சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது படமான இதன் ஷூட்டிங் அந்தமானில் தொடங்கியது. இதனிடையே சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முக்கியமாக இந்தப் படம் ரஜினியின் வேட்டையனுக்கு போட்டியாக களமிறங்குகிறது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கங்குவா பான் இந்தியா படமாக ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள கங்குவா படத்தின் ஷூட்டிங் இந்தாண்டின் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் ஒர்க், போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் ஆகியவற்றையும் அசுர வேகத்தில் கவனித்து வருகிறார் இயக்குநர் சிவா. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தாமதித்து வந்தது. இப்போது ஒருவழியாக கங்குவா ரிலீஸ் தேதியும் முடிவாகிவிட்டது. இதனால் இனி அடுத்தடுத்து கங்குவா டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு முன்பாக இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
அதாவது பாடலாசிரியர் விவேகா கங்குவா படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... Feeling very proud to be a part of this great film!” என குறிப்பிட்டுள்ளார். கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பார்த்துவிட்டு கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். இதனால் கங்குவா எப்படி இருக்குமோ என சூர்யா ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு குட் நியூஸ்ஸாக பாடலாசிரியர் விவேகாவின் விமர்சனம் அமைந்துள்ளது. பொதுவாகவே படம் ரிலீஸாகும் நேரத்தில் தான் பிரபலங்களுக்கு தனியாக ஸ்க்ரீன் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கங்குவா ப்ரோமோஷன் தொடங்கும் முன்பே, அப்படத்தின் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முன்னதாக கங்குவா திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் பாசிட்டிவாகவே விமர்சனம் கொடுத்திருந்தார். கண்டிப்பாக இந்தப் படம் சூர்யாவின் கேரியரில் இண்டஸ்ட்ரியல் ஹிட்டாக இருக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...
Feeling very proud to be a part of this great film!#Ganguva #surya #DirectorSiva #Dsp pic.twitter.com/q5IOdYWyHU — Viveka Lyricist (@Viveka_Lyrics) July 1, 2024
What's Your Reaction?