சென்னை டிடிகே சாலையைப் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்...

Apr 7, 2024 - 14:29
சென்னை டிடிகே சாலையைப் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்...

சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து சென்னை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்தாகவே மெட்ரோ ரயில் திகழ்கிறது. இதன் வெற்றியை ஒட்டி 2-ம் கட்ட பணிகளும் சென்னை நகர் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே சாலை அருகே மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் அறிவித்து மெட்ரோ நிர்வாகம் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. 

ராயப்பேட்டை ஆர்.கே.சாலை 1-வது பாய்ண்ட் பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணியினை மெட்ரோ நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.இதற்காக  ஏப்ரல் 8 முதல் 14 ம் தேதி வரை 8 நாட்கள் இரவு நேரங்களில் பணி நடைபெற உள்ளது. அதாவது பகல் 11 மணி முதல் மாலை 5  மணி வரை  மெட்ரோ பணிகள்  செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இப்பணியின் காரணமாக 7 நாட்களுக்கு பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அண்ணா மேம்பாலம் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அவ்வாறே  காமராஜர்  சாலை நோக்கி செல்லலாம். காமராஜர் சாலையிலிருந்து ஆர்.கே.சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வி.எம். தெரு, ஆர்.கே சாலை சந்திப்பு வழியாக  மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக சென்று - அண்ணா மேம்பாலம்  நோக்கி செல்லலாம்.

TTK சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமி சந்திப்பில் TTK சாலை வழியாக நேராக சென்று,  காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.  இவ்வாறாக பல வழிதடங்கள் மாற்றப்பட்டுள்ளதால் நன்கு அறிந்து பின்னர் பயணம் செய்தால் போகவேண்டிய இடத்திற்கு சென்றடையலாம். மேலும் தினந்தோறும் காலை 05.00 மணிக்கு டாக்டர் ராதகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து சீராக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow