கடலுக்குள் கைகலப்பு... காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 மீனவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 28, 2024 - 19:19
கடலுக்குள் கைகலப்பு... காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்...

தரங்கம்பாடியை சேர்ந்த 9 மீனவர்கள் ஒரே படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். துப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியபோது, சுருக்கு வலை பொருத்திய பைபர் படகில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், அவர்களின் படகு மற்றும் வலைகளை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் காயமடைந்த மீனவர்களான சதீஷ்குமார் மற்றும் நித்திஷ் ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வரும் நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மீனவர்கள் வலியுறுத்தினர். மேலும், சுருக்குவலையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow