"370 நீக்கம் - வளர்ச்சியை நோக்கி ஜம்மு காஷ்மீர்" : பிரதமர் மோடி பெருமிதம்
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதால், மாநிலம் தற்போது வளர்ச்சியை நோக்கி நகர்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். சுகாதாரம். கல்வி, ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடைய வகையில் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அரசுப்பணியாளர்கள் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர், சங்கல்டன் - பாரமுல்லா இடையேயான ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை 40 ஆண்டுகளாக காங்கிரஸ் நிறைவேற்றாத நிலையில், பாஜக அதனை நிறைவேற்றியதாகக் கூறினார்.
ஜம்முகாஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால், மாநிலம் தற்போது வளர்ச்சியை நோக்கி நகர்வதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு, கடத்தல், பிரிவினை தொடர்பான ஏமாற்றமளிக்கும் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மாநிலம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?