ரீ கிரியேட்டில் மறைந்த தலைவர்கள்... மரணத்தை மழுங்கடிக்கும் AI... ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலா..?
செயற்கை நுண்ணறிவு, மறைந்த தலைவர்கள், தொழில் நுட்பம், மீண்டும் உயிர்த்தெழும் தலைவர்கள், பலன், பாதகம், ஜெயலலிதா, கருணாநிதி, தேர்தல் பிரச்சாரம், Artificial Intelligence, Late Leaders, Technology, Resurgent Leaders, Benefit, Disadvantage, Jayalalitha, Karunanidhi, Election Campaign
அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு இடையே இருந்த போட்டியை மரணம் அணைத்தாலும், செயற்கை நுண்ணறிவு அவர்களை அவதரித்து மீண்டும் போட்டி போட வைத்துள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கை பலனா, பாதகமா? பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திமுக vs அதிமுக என்பதைப்போல, 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு ஜெயலலிதா vs கருணாநிதி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு அவர்களின் இந்த 2 முதலமைச்சர்களின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும். இவர்கள் இருவருக்குமான நீயா..? நானா..? போட்டியை மரணம் தான் முடித்து வைத்தது. ஆனால் இன்று நிழல் உலக கடவுளான AI அவர்களை மறுஜென்மம் எடுக்க வைத்துள்ளது.
என்னதான் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு, கோடி ரூபாயை கொடுத்து நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்து வீர வசனம் பேசினாலும், மறைந்த தலைவர்கள் பேச்சுபோல் ஆகாதென்பதை புரிந்து கொண்டு ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறது அதிமுக, திமுக. அதன்டி 2016ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதாவும், 2018ம் ஆண்டு மறைந்த கருணாநிதியும் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி மக்களை AI தளத்தில் சந்தித்து வருகின்றனர்.
ஒரு புறம் என்னுடன் நில்லுங்கள் நாங்கள் மக்களுக்காக இருக்கிறோம் என ஜெயலலிதா பேச, மறுபுறம் தனது முத்திரை சன்கிளாசை அணிந்து தனது மகன் ஸ்டாலினுக்காக கருணாநிதி பேசுகிறார். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவலாக பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்து காஸ்ட்லி பேச்சாளர்களை வரவழைத்து கூட்டத்தைக்கூட்டி பிரசாரம் செய்வதைக் காட்டிலும், செலவு குறைந்த வலுவான பிரசாரமாக இது பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசியல் கார்ட்டூன்களில் எதிர் வேட்பாளர்களை கேலி செய்வது என்பது நூற்றாண்டுகள் பழமையான தந்திரம் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களும் வீடியோக்களும் உண்மையானவை என எளிதில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உயிருடன் இருக்கும் போதே, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் deep fake வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது. இதனால் மறைந்த தலைவர்களை வீடியோக்களுக்கு பயன்படுத்துவது ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?