மழை வெள்ளம்: 3 நாடாளுமன்ற தொகுதிகள் திமுகவுக்கு தயார்! - அமைச்சர் சேகர் பாபு

Feb 13, 2024 - 14:32
Feb 13, 2024 - 14:34
மழை வெள்ளம்: 3 நாடாளுமன்ற தொகுதிகள் திமுகவுக்கு தயார்! - அமைச்சர் சேகர் பாபு

மழை வெள்ளத்தில் மேற்கொண்ட சிறப்பான மீட்பு பணியின் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுகவிற்கு வெற்றியை பரிசாக மக்கள் அளிக்க உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் திமுக அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ``ஆர்.பி.உதயகுமார் மழைக்கு முன்பாக அரசு எதுவும் செய்யவில்லை என பொத்தம் பொதுவாக கூறுகிறர். அவர் சென்னை வாசி இல்லை என்பதால் அரசு மேற்கொண்ட பணிகள் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். 

மழைவெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் 3 நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மண்டலவாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 70 கோடி ரூபாய் அளவு உணவுப் பொருட்களை கட்டணம் இன்றி வழங்கினோம். 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம்.

நாங்கள் மேற்கொண்ட மழை வெள்ள நிவாரணப் பணியின் விளைவாக சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதியையும் திமுகவுக்கு பரிசாக வழங்க சென்னை மக்கள் தயாராக இருக்கின்றனர். மழைஈரம் காயும் முன்பு தனது காலினை தரையில் பதித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்`` என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow