கனிம வள கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கொள்ளை கும்பல்

புகாரியின் பேரில் ஆலடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலம்புவை தேடி வருகின்றனர்.

Dec 28, 2023 - 16:28
Dec 28, 2023 - 18:34
கனிம வள கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கொள்ளை கும்பல்

கனிம வள கொள்ளையை தடுக்க சென்ற  கனிமவளத்துறை பறக்கும் படையினர் மீது கொள்ளை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொக்காம்பாளையம் சாலை வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இலுப்பையூர் பகுதியில் இருந்து கனிம வளத்தின் ஒன்றான கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக விழுப்புரம் மாவட்ட கனிமவளத்துறைக்கு    உதவி இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கனிமவளத்துறை பறக்கும் படையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

 அப்போது லாரியில் கூழாங்கற்களை ஏற்றி கடத்தி செல்லும் போது லாரி பிடித்து லாரியில் உதவி பொறியாளர், உதவி இயக்குனர் அமர்ந்து கொண்டு  உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லும்போது  கொக்கம்பாளையத்தை சேர்ந்த சிலம்பு என்ற சிலம்பரசன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் லாரியை மறித்தனர்.

 அப்போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது இதில் லாரியில் பயணம் செய்த கனிமவளத்துறை அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் லாரியில் இருந்து வெளியே வரும்போது சிலம்புவின் ஆதரவாளர்கள் கனிமவளத்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியதால் படுகாயம் அடைந்தனர்.

 அதிகாரிகள் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரத்தை பறித்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விழுப்புரம் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஓட்டுநர்கள் சேகர் மற்றும் துரைராஜ் நான்கு பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் பரிந்துரை செய்யப்பட்டனர். 

இது குறித்து கடலூர் மாவட்டம் ஆலடி காவல் நிலையத்தில் கனிமவளத்துறையினர்   கூழாங்கல் கடத்தும் கும்பல் தாக்கியதாகவும், தாங்கள் அணிந்து இருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரத்தை பிடுங்கி சென்றதாகவும், ரகசியமாக வந்த தனியார் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் புகார் அளித்துள்ளனர். புகாரியின் பேரில் ஆலடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலம்புவை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow