தஞ்சாவூரில் ரூ.1.21 கோடி மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள்

மொத்தம் ரூ.1,21,03,420  மதிப்பிலான மிதிவண்டிகள்  வழங்கப்பட்டுள்ளது.

Dec 28, 2023 - 16:08
Dec 28, 2023 - 18:33
தஞ்சாவூரில் ரூ.1.21 கோடி மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கான ரூபாய் 1 கோடியே 21 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்.

 தஞ்சாவூர் மாநகராட்சி கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில்  நடைபெற்றது.தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா  தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தஞ்சாவூர் பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகி 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1079 மாணவர்களுக்கு ரூ.52,87,100 மதிப்பிலான மிதிவண்டிகளும், 1432 மாணவிகளுக்கு ரூ.68.16,320 மதிப்பிலான மிதிவண்டிகளும்  மொத்தம் ரூ.1,21,03,420  மதிப்பிலான மிதிவண்டிகள்  வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வன், தஞ்சாவூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மேத்தா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow