அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி மற்றும் உ.பி முதலைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Jan 22, 2024 - 12:13
Jan 22, 2024 - 18:42
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.மேலும் ராமர் சிலை முன்பு விழுந்து மனமுருகி வேண்டிக்கொண்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். 

அயோத்தியில் 70 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ராமர் கோயில் வளாகம் அமைந்துள்ளது.இதில் 2.7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நாகரா பாரம்பரிய முறையில் 3 மாடியில் 380 அடி நீளம், 250 அடி அகலம் 161 அடி உயரத்தில் ராமர் கோயில் அமைந்துள்ளது.

மேலும், அயோத்தி ராமர் கோயிலில் 20 அடி உயரம் கொண்ட தளம், 3 தளங்களில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோயிலுக்கு 44 நுழைவுவாயில்கள், கருவறையில் 5 அடி உயர ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று 12.20 மணிக்கு ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். பின்னர் தீபாரதனை காட்டி மனமுருகி வேண்டிக்கொண்டார்.இதைத்தொடர்ந்து தாமரை மலர்களை கொண்டு ராமருக்கு வழிபாடு செய்தார்.பின்னர் மாடதிபதிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது அங்கிருந்த மாடதிபதி ஒருவர் பிரதமர் மோடிக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் மோடியும் மடாதிபதிகளுக்கு பட்டுவேட்டிகளையும், தங்க பேனாக்களையும் பரிசாக அளித்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி வந்து வழிபட்டார். இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் முதல் பிரசாதம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

இதன்காரணமாக அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமெண்டோ படைகள், உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வந்திருந்த உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், ரன்வீர் கபூர், ஆலியாபட், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரை பிரதமர் மோடி வரவேற்றார்.

கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்தத்தை வாங்கி பருகினார்.இதைத்தொடர்ந்து உத்தப்பிரதேச முதலமைச்சர் உள்ளிட்டோர் பேசினர்.அதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, ராமர் இனி கொட்டகையில் இருக்கமாட்டார். அவர் இனி கோயில் கருவறையில் இருப்பார்தான் இருப்பார். மிகப்பெரிய முயற்சிக்கு பிறகு ராமர் கோயில் இங்கு திறக்கப்பட்டுள்ளது.அடிமைத்தனத்தின் அடையாளம் நீங்கியுள்ளது.இதன்மூலம் இன்று இந்தியாவே தீபாவளியை கொண்டாடி வருகிறது.ராமர் கோயில் திறப்பின் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்துள்ளது. அயோத்திக்கு வருகை தந்த பக்தர்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். நூற்றாண்டு கால தியாகங்களும், பொறுமையும் இன்று நமக்கு பலனளித்துள்ளது. ராமரின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது. 

ராமர் கோயில் இந்திய ஓற்றுமைக்கான அடையாளமாக திகழ்கிறார். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராமர்தான் பாரத தேசத்தின் ஆதாரமாக உள்ளார்.ஆகையால் ராமர் நிரந்தமானவர் மட்டுமல்ல நித்தியமானவராக உள்ளார்.மேலும்  நமக்கான வழிகளை காட்டுபவராக உள்ளார் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow