மகளை வைத்து தொழில்.. முக்கோண காதலால் அடங்கிய மூச்சு..! பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய "மம்மி"
பாலியல் தொழில் செய்து வந்த பெண் மீது மையல் கொண்டு, தன்னுடன் மட்டுமே பழக வேண்டும் என தொல்லை கொடுத்த ரவுடியை, தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை ஏவி கொலை செய்த தாய், மகள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் பகுதியை சேர்ந்தவர் ஹிமாம் பீ என்ற ஹசினா. இவருக்கு 19 வயதில் நசீமா என்ற மகள் உள்ளார். ஆடம்பரமான சொகுசு வாழக்கைக்கு ஆசைப்பட்ட ஹசீனா, தனது கணவரை பிரிந்து ஹைதராபாத்திற்கு சென்றார். யூசிப்குடா என்ற பகுதியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டில் வாடகைக்கு குடியேறிய அவர் தான் வீட்டு வேலை செய்து வருவதாக கூறியதோடு, அவரை கொஞ்சமாக தனது வலையில் வீழ்த்தினார். தொடர்ந்து அவரிடம் நெருங்கி பழகி பணத்தை கறந்ததோடு, அந்த வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காரியம் முடிந்ததும் அந்த போலீஸ்காரரை இனிமேல் இந்த பக்கம் வரக்கூடாது என விரட்டித்து விட்டு, பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலையும் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களில் பணம் கொட்ட துவங்கியது. இந்த நிலையில் தன்னுடைய 19 வயது மகள் நசீமாவையும் தொழிலில் இறக்கினார் ஹிமாம் பீ. இதனால் அவருக்கு வருமானம் அதிகரித்தது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது.
அப்படி ஒரு வாடிக்கையாளராக வந்தவர் தான் அப்பகுதி ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான ராமு. ஆரம்பத்தில் ஒரு வாடிக்கையாளராக மட்டுமே ஹிமாம்பி வீட்டுக்கு சென்று வந்த ராமுவுக்கு கோடிகளில் சொத்துக்கள் இருப்பதை அவர் அறிந்துகொண்டார். இதையடுத்து, தன்னுடைய மகள் நசீமாவை ராமுவுக்கு நெருக்கமாக பழக வைத்தார். ராமுவும் நசீமாவிடம் மயங்கினார், இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட ஹிமாம்பி ராமுவிடமிருந்து அதிக பணத்தை வசூல் செய்ததோடு, நிஜாம்பேட்டையில் இருந்த வில்லாவையும் தனது மகள் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார்.
அதேநேரம், அந்த வீட்டிற்கு வாடிக்கையாளராக வந்த வினோத் என்ற ரவுடிக்கு நசீமா மீது காதல் ஏற்பட்டது.
பாலியல் தொழில் மூலம் கிடைத்த உள்ளூர் ரவுடிகளின் அறிமுகம் மூலம் குட்டி தாதாவாக வலம் வந்து கொண்டிருந்த ஹிமாம்பி அவ்வப்போது கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, மிரட்டி பணம் பறிப்பது ஆகியவை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் வினோத் - நசீமா விவகாரம் ராமுவுக்கு தெரிய வர, அவர் ஹிமாம் பி-யிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு, பிரச்சனையாக மாறியது.
ஒரு கட்டத்தில் ராமுவின் தொல்லை அதிகரித்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஹிமாம்பி, இதற்கு ரவுடி வினோத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு, நசீமாவுக்கு ராமு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், அவர் உயிரோடு இருக்கும் வரை எதுவுமே செய்ய முடியாது என்றும் நைஸாக பேசியுள்ளார். நசீமாவின் மீதான் காதல் மயக்கத்தில் இருந்த வினோத்திற்கு, இந்த வார்த்தைகள் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக களத்தில் இறங்கிய அவர், நண்பரான ரவுடி மணிகண்டாவிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ராமுவின் கொலைக்கான திட்டம் அரங்கேறியது. கடந்த 7ம் தேதி திட்டமிட்டபடி, நசீமா செல்போன் மூலம் ராமுவை தொடர்புகொண்டு, ஹைதராபாத்தில் உள்ள யூசப்குடா பகுதிக்கு வரவழைத்தார் ஹிமாம்பி. அங்கு தயாராக காத்திருந்த வினோத் உள்ளிட்ட ரவுடிகள் அந்த பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றுக்கு ராமுவை தூக்கி சென்றனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட முறை ராமுவை கத்தியால் குத்தி கொலை செய்த அவர்கள் அவருடைய மைத்துனருக்கு வீடியோ கால் செய்து மாமன் உடலை எடுத்துச் செல் என்று கூறி தொடர்பை துண்டித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற் வந்த ராமுவின் மைத்துனர் தன்னுடைய மாமன் உடலை பார்த்து கதறி அழுது போலீஸாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, கொலைக்கு காரணமான ஹிமாம்பி, அவருடைய மகள் நசீமா, ரவுடிகள் 6 பேர் உட்பட 8 பேரையும் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸ் விசாரணையில் 2017, 2018 மற்றம் 2020ம் ஆண்டுகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது, மிரட்ட பணம் பறித்தது உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
What's Your Reaction?