தூத்துக்குடியில் மீண்டும் போட்டி... கனிமொழி விருப்பமனு...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு அளித்துள்ளார். 

Mar 5, 2024 - 12:49
தூத்துக்குடியில் மீண்டும் போட்டி... கனிமொழி விருப்பமனு...

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணி தொகுதி பங்கீடு, விருப்பமனு தாக்கல், வேட்பாளர் அறிவிப்பு என தேசிய, மாநிலக் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை கடந்த 1-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து வருகின்றனர். 

நேற்று (04.03.2024) மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாநிதி மாறன் எம்.பி, மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தார். மேலும் வட சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி இன்று(05.03.2024) விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விருப்ப மனு அளிப்பதற்கு முன்பு, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்ற கனிமொழி எம்.பி., மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow