தேவகோட்டை:கட்டிட மேற்கூரை சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

தேவகோட்டை போலீசார் திலீப்குமாரின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்

Dec 19, 2023 - 14:48
Dec 19, 2023 - 17:16
தேவகோட்டை:கட்டிட மேற்கூரை சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

தேவகோட்டை அருகே மழையின் காரணமாக கட்டிட மேற்கூரை  சுவர் இடிந்து விழுந்து வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மா விடுதி கோட்டையில் பீகாரை சேர்ந்த பலர் ஒரு கட்டிடத்தில் தங்கி இருந்து தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரிடம் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில்,சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடர் மழை பெய்து வந்த நிலையில், கூலி தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் கட்டிடம் வலுவிழந்து அறைகளாக எழுப்பப்பட்டிருந்த தடுப்பு சுவர் தரையில் விழுந்தது.

அப்போது அந்த இடத்தில் படுத்திருந்த திலீப்குமார் மற்றும் ரஞ்சித்குமார் என்பவர்கள் மீது விழுந்ததில் திலீப்குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த ரஞ்சித்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த தேவகோட்டை போலீசார் திலீப்குமாரின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow