சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அடிதடி.. தண்ணீர் பாட்டிலால் ஓங்கி அடித்த அதிகாரி.. மண்டையில் பீறிட்ட ரத்தம்

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகத்திற்குள் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறி ரத்தக்களறியானது. 

Apr 25, 2024 - 12:36
சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அடிதடி.. தண்ணீர் பாட்டிலால் ஓங்கி அடித்த அதிகாரி.. மண்டையில் பீறிட்ட ரத்தம்

பொதுவாக அரசு தனியார் அலுவலகங்களில் சக ஊழியர்களுக்கு இடையே ஏற்படும் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதனை தடுக்க பல நிறுவனங்களில் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால், இதுபோன்று பெரும்பாலான  அரசு அலுவலங்களில் கிடையாது. 

இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் குமார், சென்னை நுங்கம்பாக்கம் CGST Central Excise திருல்லிக்கேணி பிரிவின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் நுங்ம்பாக்கம் ஜிஎஸ்டி அலுவலகம் இணைப்பு கட்டிடம் 6-வது தளத்தில்  உள்ளது. 

அதே அலுவலகத்தில் ஸ்ரீ அவினாஷ் பாபு ராவ் என்பவரும் மற்றொரு பிரிவின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே,  பணி சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது, ஆத்திரமடைந்த அவினாஷ் பாபு, சில்வர் தண்ணீர் பாட்டிலை வைத்து ரஞ்சன் குமார்  தலையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. உடனே ரஞ்சன்குமார் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ரஞ்சன்குமார் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow