வெடிகுண்டு மிரட்டல்-நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சோதனை
அறிவியல் மையத்தில் உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை
கல்கத்தாவில் அமைந்துள்ள தலைமை அறிவியல் மையத்திற்கு இ-மெயில் மூலம் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டலை தொடர்ந்து நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
கல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய அருங்காசியகம் அறிவியல் மையத்தின் தலைமை அலுவலகத்திற்கும் பெங்களூருவில் உள்ள அறிவியல் மைய அலுவலகத்திற்கும் பொதுவாக வந்த ஒரு இமெயிலில் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு அறிவியல் மையங்களில் இன்று வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் குழுவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அதிநவீன கருவிகளுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு பகுதியாக தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக அறிவியல் மையத்தில் உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இன்று முழுவதும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மையம் கருவிகள் உள்ள அறைகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
What's Your Reaction?