நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு மற்றும் பங்களாதேஷ் துணை துதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா எப்போதும் பிஸியாக நடிகையாக உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் இல்லம் மற்றும் அங்குள்ள பங்களாதேஷ் துணை தூதரகத்திற்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த போலீசார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், அந்த மிரட்டல்கள் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் 5 'ஆர்டிஎக்ஸ்' (RDX) ரக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெடிக்கும் என்றும் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த மிரட்டல்களை விடுத்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் வருவது தொடர் கதையாகி வருகிறது. இப்படி வரும் மிரட்டல்களை போலீசார் சோதனை நடத்தினார். அது உண்மை இல்லை என்பது பிறகு தெரிய வருகிறது. அதே நேரம் இப்படிப்பட்ட புகார்களை தவிர்க்கவும் முடியாத சூழ்நிலை உள்ளதால் போலீசாருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?

