காலை சிற்றுண்டித் திட்டம், கல்விக் கடன்.. கல்வித்துறைக்கு இத்தனை திட்டங்களா? அசர வைக்கும் தமிழக பட்ஜெட்..!
ரூ.300 கோடி மதிப்பில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
காலை சிற்றுண்டித் திட்டத்தில் மேலும் 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும், 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடிக்கு கல்விக்கடன் அளிப்பதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ரூ.1,500 கோடியில் அடையாறு கால்வாய் சீரமைக்கப்படும் என அறிவித்தார். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமையை மேம்படுத்த நகர்ப்புற பசுமை திட்டம் என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். காலை சிற்றுண்டி திட்டம் மேலும் 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44 ,042 கோடியும் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். கோவையில் ரூ.1,100 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொழில்துறை 4.o தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும் எனவும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 100 கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடி மதிப்பில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார். 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக்கடன் அளிப்பதாகவும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் உருவாக்கப்படுவதாகவும் கோவையில் கலைஞர் கருணாநிதி பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வரும் கல்வி ஆண்டு முதல், தமிழ் புதல்வன் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறுவர் எனவும் அமைச்சர் கூறினார். பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் அமைக்கப்படுவதாகவும், ரூ.300 கோடி மதிப்பில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் நம்மை காப்போம் திட்டத்துக்கான உச்சவரம்புத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?