சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விமர்சையாக நடந்த மார்கழி தேரோட்டம்

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் தேரை வடம்பித்து இழுத்து துவங்கி வைத்தனர்.

Dec 26, 2023 - 16:21
Dec 26, 2023 - 17:29
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விமர்சையாக நடந்த மார்கழி தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது.இதில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருகோவில் ஆண்டு தோறும் தை மற்றும் மார்கழி மாத தேர் திருவிழா நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி தேர் தேர்திருவிழா கடந்த 18ம்தேதி கெடியேற்றத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி விதி உலா வருவது மற்றும் மக்கள் சந்திப்பு என கடந்த ஒன்பது நாள்களும் பல்வேறு நிகழச்சிகள் நடைப்பெற்றது.ஒன்பதாம் நாள்  திருவிழிவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் தேரை வடம்பித்து இழுத்து துவங்கி வைத்தனர்.

சுவாமி தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.அதேபோல் பிள்ளையார் தேரே சிறுவர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் குமரியில் மட்டுமின்றி கேரளாவிலும் இருந்து  ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow