"பட்ஜெட் - சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல..!!" பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகார்..!
மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிசாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தடையின்றி படித்தாரே தவிர, சொல்லிக் கொள்ளும் வகையில் அறிக்கையில் எதுவும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் ஆவாச யோஜனா திட்டம், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அடையாறு கால்வாயை தூர்வாரும் பணி, கலைஞர் கருணாநிதியின் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருவதாகவும், தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மேலும், கோவையில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் டைட்டில் பார்க்கை, ஏதோ புதிதாக பேசுவது போல் மாநில அரசு அறிவித்துள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
What's Your Reaction?