கூடுதல் செலவு.. மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை.. சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அமைச்சர்..!
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை அமைச்சர் குற்றச்சாட்டினார்.
நடப்பாண்டின் நிதிப்பற்றாக்குறையை 3.44% ஆக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளதாகக் கூறிய நிதியமைச்சர், மெட்ரோ ரயில் முழுச்செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய சூழல் உருவானதால் 9,000 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டின் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, ஆட்டிசம் உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்க ரூ.25 கோடியும் 27,000 தேயிலை சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.9 கோடியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
ரூ.2 கோடியில் பழங்குடியினர் மொழி வளங்கள் ஆவணப்படுத்தப்படும் எனவும் ரூ.133 கோடியில் பத்திரப் பதிவு துறை நவீனப்படுத்தப்படும் எனவும் கூறினார். மெட்ரோ ரயில் முழுச்செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய சூழல் உருவானதால் 9,000 கோடி செலவீனம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மிக்ஜாம் புயலால் மாநிலத்திற்கு எதிர்பாராத செலவீனம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும் எனவும் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக உயரும் எனவும் அவர் கூறினார். வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடியாக இருக்கும் எனக்கூறிய அமைச்சர், நடப்பாண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.44% ஆக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளதாகவும் கூறினார்.
What's Your Reaction?