“என்ன கொடுமை சார் இது” வாங்கி சென்ற விருப்ப மனு திரும்ப வரல: விஜய் வேதனை 

'த.வெ.க.,வில் போட்டி போட்டு விருப்ப மனுக் களை வாங்கி சென்றவர் களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து மீண்டும் கொடுக்கவில்லை என்பதால் கட்சி தலைமை கவலை அடைந்துள்ளது. 

Feb 17, 2026 - 17:01
“என்ன கொடுமை சார் இது” வாங்கி சென்ற விருப்ப மனு திரும்ப வரல: விஜய் வேதனை 
வாங்கி சென்ற விருப்ப மனு திரும்ப வரல: விஜய் வேதனை 

சட்டசபை தேர்தலுக் காக, தவெக, சார்பில், போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை, பனையூர் அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங் கப்பட்டது. ரூ 100 கொடுத்து மனு வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், முதல் நாளே, 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. மனு வாங்க ஏரா ளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதி வாசிகளும் தவெக தொண்டர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இதனால்,  'மனு வாங்க நேரில் வர வேண்டாம். 'ஆன்லைன்' வழியே, மனு வாங்கிக் கொள்ளலாம்' என, கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில், விருப்ப மனு சமர்ப்பிக்க, 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நேரில் மற்றும் ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர். 

பூர்த்தி செய்த மனுவை திரும்ப கொடுக்கும் போது ரூ 10,000 முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் வழங்க வேண்டும் என தவெக தலைமை அறிவித்து இருந்தது.  இதில், 5,000க்கும் குறைவான மனுக்கள் தான், பூர்த்தி செய்யப்பட்டு கட்சி தலை மைக்கு திரும்ப வந்துள்ளதாக தெரிகிறது.

அதிலும், பல மனுக்களில் கட்டு தொகைக்கான வரைவோலை இணைக் கப்படவில்லை. விருப்பமனு திரும்ப வராத காரணத்தால் விஜய் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.  மனுவை சமர்ப்பிக்க 20-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதனால் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு தவெக பனையூர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்து இருக்கிறது. விருப்ப மனுக்களை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow