கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்ட இந்தியா... குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த பல்கேரிய அதிபர்...

Mar 21, 2024 - 03:17
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்ட இந்தியா... குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த பல்கேரிய அதிபர்...

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல் மற்றும் அதில் பணியாற்றியவர்களை இந்திய கடற்படை மீட்டதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பல்கேரியாவின் அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். 3 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் கப்பலை வைத்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 17) இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் மூலம் இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 17 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரையும் இந்திய கடற்படையினர் சரணடைய செய்தனர். 

இந்திய கடற்படையின் இந்த செயலுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஆகியோருக்கு பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரூமென் ராதேவ், இந்திய கடற்படையின் துணிச்சலான நடவடிக்கையின் மூலம் 7 பல்கேரிய குடிமக்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மீட்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow