இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து படிக்கலாம்... மோடியிடம் தொலைபேசியில் பேசிய ஜெலென்ஸ்கி...!
இந்தியா - உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், மீண்டும் இந்திய மாணவர்கள் உக்ரைன் வந்து படிக்கலாம் என விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவளித்து உலகின் பெரும்பாலான நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளையும் செய்து வருகின்றன. அதன் காரணமாக வலுவான எதிர்தாக்குதலையும் உக்ரைன் மேற்கொண்டு வருகிறது.
இந்த போரில் இருநாடுகளிடமும் போரை நிறுத்த இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பேசினார். மேலும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்தியா நிலையான ஆதரவை தரும் எனவும் கூறினார்.
இதையடுத்து, பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து ஜெலென்ஸிகியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி பேசியது குறித்து பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து படிக்கவும் விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?