"பினாயில் வாங்கிட்டு வாங்க" ஆஃபிசர்கள் அதிரடி..! ஆயிரம் கிலோ மாம்பழங்கள் அழிப்பு
கோடை வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால் மாம்பழங்கள் முழு விளைச்சல் காண்பதற்கு முன்பாகவே வெம்பி கீழே விழுகிறது.
தென்காசி அருகே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கோடை வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால் மாம்பழங்கள் முழு விளைச்சல் காண்பதற்கு முன்பாகவே வெம்பி கீழே விழுகிறது.
இதனால், தென்காசியின் பல இடங்களில், மாம்பழங்களை முழு விளைச்சல் காண்பதற்கு முன்பே பறித்து ரசாயனம் தடவி விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வல்லம் பகுதிகளில் உள்ள சில மாம்பழ கிடங்குகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
இதில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் என்றும், இதுபோன்ற செயல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
What's Your Reaction?