சென்னையில் தொழிலாளர்கள் தான் குறி-கேரள இளைஞர் கஞ்சாவுடன் கைது
கேரள இளைஞரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப் பட்ட மொபைல் போன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளா இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து போதைப் பொருள் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை தெற்கு மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடைத்த ரகசிய தகவல்களை அடிப்படையில் அசோக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கருப்பு கலர் டிராவல் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். பின்பு அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்த பொழுது கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.விசாரணையில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆஸ்கர் தயட்டு சித்ரா பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர் வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட ஆஸ்கர் தயட்டு சித்ரா என்பவரிடம் 3 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?