குமரி அருகே மூதாட்டியை வழி மறித்து தங்க சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் செயினை பறித்துக்கொண்டு பதைபதைப்புடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் வைக்கல்லூரில் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வைக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜலஜா (62 ).இவர் நேற்று காலை காஞ்சாம்புறத்தில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது தனிமையில் வருவதை கண்ட வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ஜலஜாவின் கழுத்தில் கிடந்த சுமார் 2 பவன் தங்க தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு கோதேஷ்வரம் சாலை வழியாக தப்பி ஓடி உள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜலஜா சத்தம் போட்டு கத்த அந்த பகுதியில் நின்றிருந்த வாலிபர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து நகையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் பிடிபட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த அஜின் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவரா? என்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மூதாட்டியிடம் செயினை பறித்துக்கொண்டு பதைபதைப்புடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?