நாகர்கோவில் வாலிபரைக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுனர்கள் நீதிமன்றத்தில் சரண்:

கோர்ட்டில் சரண் அடைந்த கொலையாளிகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Dec 30, 2023 - 16:48
Dec 30, 2023 - 18:29
நாகர்கோவில் வாலிபரைக் கொன்றதாக  ஆட்டோ ஓட்டுனர்கள் நீதிமன்றத்தில் சரண்:

நாகர்கோவில் அருகே இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன வாலிபர் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டிவிடி காலணி பகுதியை சேர்ந்தவர்  சரண் (27) மீனவரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்று வீடு திரும்பவில்லை.இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார், வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

இந்நிலையில் டிவிடி காலணி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான சீனிவாசன் மற்றும் மோகன், பறக்கை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்து, நாகர்கோவிலில் வாலிபர் ஒருவரை கொலை செய்துள்ளதாக  வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அதன் பேரில் அவர்கள் அளித்த அடையாளத்தின் அடிப்படையில் கோட்டார் போலீசார் நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியில் உள்ள பறக்கின்கால் கால்வாய் பகுதியில் சென்ற போது துர்நாற்றாம் வீசிய நிலையில் சாக்கு மூடை ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் பிரித்து பார்த்த போது, 2 நாட்களுக்கு முன் காணாமல் போன சரண் சடலமாக சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது,

சில நாட்களுக்கு முன் சீனிவாசனின் அண்ணன் மகனை சரண் அடித்துள்ளதாகவும், அதன் பேரில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாகவும்  போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தொடர்ந்து விசாரணையும்  மேற்கொண்டு வருகின்றனர். கோர்ட்டில் சரண் அடைந்த கொலையாளிகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow