கோவையில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்.... பொய்களை பரப்ப வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி நடத்துகிறார்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாஜகவின் கட்டுக்கதைகள் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளி அல்ல
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1,273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தேர்தல் களத்தில் அறிவித்த வாக்குறுதிகளை பலவற்றை நிறைவேற்றிய மனஉறுதியோடு, தெம்போடு, துணிவோடு மக்களை சந்திக்க வந்துள்ளேன். மக்களின் முகத்தை பார்க்கும்போது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் வந்தாலும் இனி திமுக தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு முன்னேறி வருவதைப் பார்த்து, சிலர் பொறாமைப்பட்டு, மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களை பரப்ப வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மக்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். அவர் என்ன திட்டங்களை கொண்டுவந்தார் அதை தடுப்பதற்கு? பாஜகவின் கட்டுக்கதைகள் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளி அல்ல" எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?