மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. கூடுதலாக இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம் !

சென்னையில் இன்று சில மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Feb 18, 2024 - 08:30
Feb 18, 2024 - 08:31
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. கூடுதலாக இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம் !

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் இயக்கப்படும் ரெயில் சேவைக்குப் பதிலாக, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow