நடிகர் மன்சூர் அலிகான் மீது மீண்டும் வழக்குப்பதிவு!..மக்கள் கூடியதால் பரபரப்பு...
2 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மளிகைதோப்பு பகுதியில் காலணி தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே ஆதரவு திரட்டினார். அப்போது அவருடன் பொதுமக்கள் மற்றும் பெண்கள் செல்ஃபி எடுக்க கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியினர் மீது ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சி சார்ந்த 10 நபர்கள் மீது அரசு உத்தரவு மீறி கூடுதல், அனுமதியின்றி கூட்டம் கூட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி அனுமதியின்றி ஆம்பூர் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..
What's Your Reaction?