கரும்பு விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்... திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

Feb 22, 2024 - 13:26
கரும்பு விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்... திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக அரசும் குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், மாநில பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, உடனடியாக, திமுக, விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Strengthen-environmental-protection-practices...-Supreme-Court-advises-Vedanta

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow