EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை இரவு பகலாக கண்காணிக்கணும்.. இபிஎஸ் எச்சரிக்கை !
பல்வேறு முறைகேடுகள், தில்லுமுல்லை தாண்டி தேர்தல் சுமூகமான முறையில் முடிந்தது- இபிஎஸ்
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில், EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை இரவு பகலாக கண்காணிக்க வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் முகவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த கட்சி திமுக, பாஜக என சாடிய அவர், அந்த கட்சியினரின் பல்வேறு முறைகேடுகள், தில்லுமுல்லை தாண்டி தேர்தல் சுமூகமான முறையில் நடக்க முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி எனக்குறிப்பிட்டார்.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட மையங்களின் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட பழனிச்சாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருக்காமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை விழிப்புணர்வுடன் இரவு பகல் பார்க்காமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
What's Your Reaction?