பேரிடர் இழப்புகளுக்கு மத்திய அரசை குறை சொல்லக்கூடாது- அமைச்சர் ரோஜா

சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில மக்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள்

Dec 26, 2023 - 15:00
பேரிடர் இழப்புகளுக்கு மத்திய அரசை குறை சொல்லக்கூடாது- அமைச்சர் ரோஜா

பேரிடர் இழப்புகள் நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர, மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது என நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை காரணமாக கோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும்,பிரபல நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு ஆந்திரா அமைச்சர் நடிகை ரோஜாவின் வருகையை அறிந்த ஆந்திரா மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவை சூழ்ந்துக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுக்க ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டனர்.மேலும் சாமி தரிசனத்தை முடித்து விட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு அருகே இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் தங்கி இருந்த நிலையில்,அப்பகுதியில் நடிகை ரோஜா இருப்பதை அறிந்த ஆந்திரா மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஏராளமானோர் அவ்வீட்டை சூழ்ந்து வெளியே வர முடியாத அளவிற்கு முண்டியடித்துக் கொண்டனர்.

மேலும் அவரைக்காண குவிந்த ஆந்திர மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க ஒன்று கூடி செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர்.அதன்பின் நடிகை ரோஜாவின் பாதுகாப்பு காவலர்கள்  ஆந்திர மாநில பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடிகை ரோஜாவை காரில் அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் செய்தியாளரை சந்தித்த ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பேசியதாவது,  “தெலுங்கானா மற்றும் ஆந்திரா இரு மாநிலங்களிலுள்ள மக்களுக்கு இரு வேறு விதமாக எதிர்பார்ப்புகள் உள்ளன. 

தெலுங்கானாவில் பவன் கல்யாண் தோற்றது போல், ஆந்திராவில் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில மக்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.மாநிலங்களில் எந்த பேரிடர் இழப்புகள் நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு அந்த மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர, மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது எனவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow