பணி செய்ய விடாமல் தடுப்பதாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது கோயில் செயல் அலுவலர் புகார்

கனகசபை மீது பொதுமக்களை ஏன் ஏற்றப்படவில்லை என தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

Dec 26, 2023 - 15:15
Dec 26, 2023 - 15:27
பணி செய்ய விடாமல் தடுப்பதாக  சிதம்பரம்  தீட்சிதர்கள் மீது கோயில் செயல் அலுவலர் புகார்
பணி செய்ய விடாமல் தடுப்பதாக  சிதம்பரம்  தீட்சிதர்கள் மீது கோயில் செயல் அலுவலர் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயல் அலுவலர் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று தேர் தரிசனமும் நாளை ஆருத்ரா தரிசனமும் நடைபெற இருக்கிறது. 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆணி திருமஞ்சன திருவிழா நடைபெறும் பொழுது பக்தர்களை கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டது. அந்த பதாகையை அகற்ற வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் கனக சாமி மீது ஏற்றப்படவில்லை அறநிலைத்துறை சார்பில் அந்த அறிவிப்பு பதாகை உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு சர்ச்சையாக மாறியுள்ளது.

அது மாதிரியான சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என முன் எச்சரிக்கையாக தேர் திருவிழா இன்று காண வரும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதாக கோயிலில் சென்றுள்ளனர்.அப்பொழுது கனக சபை கேட் உள்பக்கம் தாழிட்டு பூட்டியதாக தெரிகிறது. அங்குள்ள தீட்சிதர்களிடம் கேட்கும்பொழுது உள்ளே பூஜை நடைபெறுவதாகவும், அதை அடுத்து பக்தர்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அதிகாரி சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா கனகசபை மீது பொதுமக்களை ஏன் ஏற்றப்படவில்லை என தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

 அதற்கு மறுப்பு தெரிவித்த திட்சீதர்கள் மீது செயல் அலுவலர் சரண்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் செயல் அலுவலர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow