IPL: அந்த இளம் விக்கெட் கீப்பரின் அதிரடி, வெற்றிக்கு வழிவகுத்தது - கேப்டன் ருதுராஜ் ருசிகரம்

மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Apr 15, 2024 - 08:11
Apr 15, 2024 - 08:15
IPL: அந்த இளம் விக்கெட் கீப்பரின் அதிரடி, வெற்றிக்கு வழிவகுத்தது - கேப்டன் ருதுராஜ் ருசிகரம்

ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் வான்கடே மைதானாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர் ரஹானே, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். எனினும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ், அரைசதம் விளாசினார். அவர்40 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களை குவித்திருந்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவும் தன் பங்குக்கு 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என அதிரடி ஆட்டம் ஆடி ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

பெரும்பாலுமான CSk ரசிகர்கள் போட்டியை காண வருவதே தோனியின் அந்த சின்ன கேமியோவுக்கு தான். ஆனால் ரசிகர்களுக்கு முழு கறி விருந்தே கிடைத்தது என்று சொல்லலாம். கடைசி 4 பந்துகள் மட்டுமே மீதமிருக்க களத்தில் இறங்கிய தோனி,  ஹர்திக்கின் பந்துகளை சிக்ஸர் பறக்கவிட்டார். ஹர்திக் வீசிய 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததால் ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். இதனை CSk மட்டுமின்றி மும்பை ரசிகர்களும் எஞ்சாய் செய்ய, அது மும்பை மைதானமா இல்லை சென்னை மைதானமா என்பது போல் ஆகியது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. 

பவுலிங்கில் கொஞ்சம் சொதப்பினாலும், கடப்பாரை பேட்டிங் லைன்னப்பால், வெற்றியை எட்டி விடலாம் என களத்தில் இறங்கியது மும்பை. ஓபனிங்கே அதிரடி காட்டிய இஷான் கிஷானும், ரோகித்தும் 7 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் அணிக்கும் பெரும் நம்பிக்கை தந்தனர். ஆனால், இம்பேக்ட் ப்ளேயராக வந்த மதீஷ் பதிரனா இஷானின் விக்கெட்டை எடுத்த  2 பந்துகளில் புதிததாக வந்த சூர்யகுமார் யாதவ்வின் விக்கெட்டையும் எடுத்தார். 

ஒருபக்கம் ரோகித் மட்டுமே நிலைத்து ஆட, அடுத்தடுத்து வந்த மும்பை பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களின் பெவிலியன் திரும்பினர். மும்பை தோல்வி உறுதியான போதிலும் ரசிகர்கள் மனநிறைவு தந்தது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் மட்டுமே. ஆனால் அவர் சதத்தை கொண்டாட முடியாத கலக்கத்தில் போட்டி நிறைவடைந்தது. சென்னை அணி 20 ரன்களில் வெற்றிப்பெற்று தனது 4வது வெற்றியை இந்த சீசனில் பதிவுசெய்தது. 

போட்டி முடிவடைந்ததும் வெற்றிக்குறித்து பேசிய CSk அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இளம் விக்கெட் கீப்பரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு வழிவகுத்தது என தோனி குறித்து புகழாரம் சூட்டினார். ஏனெனில் இறுதியில் தோனி அடித்த 20 ரன்களிலே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. அதனால் அந்த சிறிய சீற்றமான இன்னிங்க்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை ருதுராஜ் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow