ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார்.

Feb 15, 2024 - 08:15
Feb 15, 2024 - 08:27
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை அளிக்கிறார்.

இந்தாண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு அளித்த உரையில் உண்மையில்லை என குற்றம்சாட்டி, அதை வாசிக்காமல் புறக்கணித்தார். 3 நிமிடங்களிலேயே உரையை முடித்துக் கொண்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நான்காம் நாள் அமர்வில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow