பணி செய்த நிறுவனத்தில் Customer Database-ஐ திருடி புதிய நிறுவனம் தொடங்கிய கில்லாடி பணியாளர்கள்
பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
சென்னை அம்பத்தூரில் பணி செய்த நிறுவனத்தில் Customer Database-ஐ திருடி புதிய நிறுவனம் தொடங்கிய பணியாளர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ஜெய் பாலாஜி (45). இவர் அம்பத்தூரில், மெட் புரோ பிரைவேட் லிமி. என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் வடமாநில மாநிலத்தைச் சேர்ந்த உமர்(35) திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(37), அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37) மற்றும் ஆவடி பருத்திப்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன்(33.) ஆகியோர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 4 பேரும் நிறுவனத்தில் பணியாற்றிய போது, நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் குறித்து தரவுகளை மின்னஞ்சல் மற்றும் 'வாட்ஸ்அப்' வாயிலாக திருடி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் 'எம்.கேர் ப்ரோ பிரைவேட் லிமி.' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
இதையறிந்த ஜெய்பாலாஜி ஆவடி மத்திய இணைய வழி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஏற்கனவே கிளன், கார்த்திக் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்தனர். விசாரணையில் ராஜேந்திரன் தரவுகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான உமர் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?